
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் எனக் மதிப்பிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை முன்னிலைப்படுத்தி, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குவதாக அரசாங்கம் எழுத்துபூர்வமாக உறுதியளித்துள்ளதை அடுத்து, இந்த கட்டணத் திருத்தம் சுமார் 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே பாதிக்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எஞ்சியுள்ள 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த புதிய கட்டணத் திருத்தம் பொருந்தாது என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கமைய, 180க்கு அதிக மின் அலகுகளை பயன்படுத்துவோரின் மின் கட்டணம் 18 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 முதல் 180 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோரின் மின் கட்டணம் அதிகரிக்கப்படாது என – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறித்துள்ளது.


