தலைப்புச் செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

நாட்டுக்குள் விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் மே 2 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து நாடு திரும்பிய மேற்படி பௌத்த பிக்குகளிடமிருந்து விமான நிலையத்தில் 110 கிலோவுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலங்கை வரலாற்றில் விமான நிலையமொன்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெருந் தொகை போதைப் பொருள் இதுவாகும்.

இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையின்போது பிக்குகள் கைது செய்யப்பட்டனர்.