தலைப்புச் செய்திகள்

உயர்தரம் கற்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 69 மாணவர்களுக்கு, YMMAயின் புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

– எஸ்.எம். அறூஸ், ரபீக் பிர்தௌஸ், றியாஸ் இஸ்மாயில் –

கில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2024 (2025) க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று க.பொ.த.
உயர் தரத்தில் கல்வி பயிலும், தெரிவு செய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (26) அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலையில்) நடைபெற்றது.

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் MIM. றியாஸ் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை YMMA பேரவையின் தேசியத் தலைவர் குவாசி நீதிபதி சட்டத்தரணி அம்ஹர் எம்.சரீப் பிரதான பங்கேற்றார். இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானபீடத் துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளரும் அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும்அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான ஏ.எல்.ஹனீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்
றஸ்மி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளரும்,
பாலமுனை YMMA ஆலோசகருமான எம்.எப்.எம். பர்ஹான் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை YMMA பேரவையின் உபதலைவர் MRM. சியாத், அகில இலங்கை YMMA பேரவை யின் முன்னாள் தேசிய தலைவரும், புலமைப் பரிசில் குழுவின் உறுப்பினருமான சுபையிர் ஹசன், அகில இலங்கை YMMA பேரவையின் புலமைப் பரிசில் குழுவின் செயற்றிட்டத் தவிசாளர் றிஸ்வி பாறூக், அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், புலமைப் பரிசில் குழுவின் செயலாளருமான மாக்காரீம் தாஹா, அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், புலமைப் பரிசில் குழுவின் உறுபினருமான ஆசீப் சுக்ரி ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் YMMA களின் பிரதம ஆலோசகர் ஓய்வு நிலை கல்விப்
பணிப்பாளர் அல்-ஹாஜ் SL. ஆதம்பாவா, அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபர் ALM. பாயிஸ், அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் இணைப்பாளர் கலாநிதி AM. ஜெசீல், நுஜா ஊடாக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 17 YMMA களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் அதிதிகளாகக் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வருடமும் அகில இலங்கை YMMA பேரவையினால் இந்த புலமைப் பரிசில் திட்டம் இலங்கை பூராகவும் செயற்படுத்தப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் இவ்வாண்டு இந்த திட்டத்தை நடை முறைப்படுத்தும் பொருட்டு - சுமார் 2.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன் போது அகில இலங்கை YMMA பேரவையின் தேசியத் தலைவர் மற்றும்
புலமைப் பரிசில் குழுவின் தவிசாளர், செயலாளர், உறுப்பினர்களின் அர்ப்பணிபுகளுடான சேவையைப் பாராட்டி கௌரவித்து – பிரதம அதிதி ஏ.எல். ஹனீஸ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதி ஏ.எல்.ஹனீஸின் கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி – கோட்டக் கல்விப் பணிப்பாளர் MHM. றஸ்மி மற்றும் கணக்காளர் பாலமுனை YMMA ஆலோசகர் MFM.பர்ஹான் ஆகியோர் அம்பாறை மாவட்ட YMMA கள் சார்பாக, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

இதில் அம்பாறை மாவட்டத்தின் YMMA களின் பிரதம ஆலோசகர் ஓய்வு நிலை கல்விப்
பணிப்பாளர் SL. ஆதம்பாவா, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ALM. பாயிஸ், நிந்தவூர் YMMA தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஓய்வு நிலை அதிபர் றபீக் பிர்தௌஸ், அட்டாளைச்சேனை YMMA பொருளாளர் ஓய்வு நிலை ஆசிரியர் AM. சுலைமாலெப்பை ஆகியோர் – அவர்களின் கல்வி சமூகப் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் 69 மாணவர்களுக்கும் பிரதம, கௌரவ, விசேட, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டவர்களினால் புலமைப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட YMMA களின் உறுப்பினர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.