
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில், அந்த இடத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியவர், கோல் டோமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ட்ரம்ப் நேற்று (26) இரவு வொஷிங்டன் – ஹில்டன் ஹோட்லில், ஊடக விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அங்கிருந்து பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
31 வயதான ஆலன், கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரைச் சேர்ந்தவர்.

நிகழ்வு நடைபெற்ற வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சந்தேக நபர் ஒரு விருந்தினராகத் தங்கியிருந்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இவர் 2017இல் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். 2025ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் ஒரு பகுதிநேர ஆசிரியர் என்றும் Game developer எனவும் கூறப்படுகிறது.
அவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.


