
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு முன்போ, அவர் கைதாகுவார் என்று பந்தயம் கட்டி, அதன் மூலம் 04 லட்சம் டொலர் (இலங்கை பெறுமதியில் சுமார் 12 கோடி 73 லட்சம் ரூபாய்) சம்பாதித்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வெனிசுலாவுக்குள் புகுந்து – மதுரோவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் ஒருவரே, இவ்வாறு பந்தயம் கட்டியிருந்தார்.
அமெரிக்க ராணுவ சிறப்புப் படைகளின் மாஸ்டர் சார்ஜென்ட் – கேனன் கென் வான் டைக் (Gannon Ken Van Dyke) என்பவர்; அமெரிக்கப் படைகள் வெனிசுலாவிற்குள் நுழையும் என்றும், மதுரோ அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் பொலிமார்க்கெட் (Polymarket) என்ற கணிப்பு சந்தையில் பந்தயம் கட்டியிருந்தார்.

38 வயதான வான் டைக் மீது – தனிப்பட்ட ஆதாயத்திற்காக ரகசிய அரச தகவல்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதியமை, பொதுவில் இல்லாத அரசாங்கத் தகவல்களைத் திருடியமை, பண்ட மோசடி, கம்பிவழி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வான் டைக், 2008 முதல் அமெரிக்க ராணுவத்தில் ஒரு தற்காலிகப் பணியில் சிப்பாயாக இருந்து வருகிறார்.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்வதை திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் வான் டைக் ஈடுபட்டிருந்தார்.


