தலைப்புச் செய்திகள்

“மிகவும் மோசமான மனநோயாளி”: தான் கலந்து கொண்ட நிகழ்வுக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து ட்ரம்ப் கருத்து

தான் கலந்து கொண்ட நிகழ்வுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மிக மோசனமான மனநோயாளி என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அவர் அமெரிக்க அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்திய குண்டர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப் நேற்று (26) இரவு ஊடக விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அங்கிருந்து பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

இதன்போது, ட்ரம்ப் கீழே தடுக்கி விழுந்ததையும், அவரை காவலர்கள் கைதூக்கி எழுப்பி விட்டதையும், வெளியாகியுள்ள வீடியோகளில் காண முடிகிறது. விழா நடைபெற்ற இடத்துக்கு வெளியேதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ட்ரம்பின் மனைவி மெலானியாவும் கலந்து கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரைச் சேர்ந்த 31 வயதான கோல் டோமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

இதன்போது ஐந்து தடவை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக, அல் ஜசீரா தயாரிப்பாளர் கிறிஸ் ஷெரிடன் கூறியுள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ட்ரம்ப் கலந்து கொண்டார். அதன்போது, தாக்குதலின் இருக்கு நீங்களா? என்று கேட்டதற்கு, ”அப்படித்தான் நினைக்கிறேன்” என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்திய சந்தேக நபரை; “மிகவும் ’’மோசமான மனநோயாளி” என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்திய ஒரு “குண்டர்” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.’’

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.