தலைப்புச் செய்திகள்

இளம் பெண்ணை கடத்திச் சென்ற வேன் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு

படம்: AI மூலம் கற்பனையாக உருவாக்கப்பட்டது

ளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வேன் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, கடத்தப்பட்டவரை மீட்டுள்ளனர். நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கடத்தல்காரர்கள் வாகனத்தை அங்கேயே கைவிட்டு, தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அவசர உதவி எண் மூலம் இன்று பிற்பகல் (29) பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று, சம்பந்தப்பட்ட வாகனத்தை உரிய சோதனைச் சாவடியில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயணித்ததால்,சோதனைச் சாவடியில் இருந்த பொலிஸார், வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்தியுள்ளனர்.

அப்போது, ​​வாகனத்தை ஓட்டி வந்த நபர், கடத்தப்பட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணையும் வேனையும் அந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், 26 வயதான அந்த இளம் பெண் BMCH அருகே கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

தப்பி ஓடிய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையை, பொலிஸார் தொடங்கியுள்ளனர். கறுவாத்தோட்ட பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.