
”ஈரானுக்குத் தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் வரலாம், எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம், எங்களிடம் தொலைபேசி இருக்கிறது. நல்ல பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்று – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று அமெரிக்க தூதுக் குழுவினர் பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த நிலையில், அவர்களின் பயணத்தை ட்ரம்ப் ரத்துச் செய்தார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையொன்றுக்காக, அமெரிக்கா காத்திருந்த நிலையில், ஈரான் அதனைத் தட்டிக் கழித்திருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையில் நின்று கொண்டு – ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பதால், பேச்சுவார்த்தைக்கு ஈரான் செல்லவில்லை.
தொலைபேசி மூலம் சனிக்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன்; அச்சுறுத்தல்கள் அல்லது முற்றுகையின் கீழ் “திணிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில்” தெஹ்ரான் ஈடுபடாது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி, ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் சந்திக்கிறார்.
இதனயைடுத்து, ”ஈரானுக்குத் தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் வரலாம், எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம், எங்களிடம் தொலைபேசி இருக்கிறது. நல்ல பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்று – ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதேவேளை, தன் வசமுள்ள அணுசக்தியை ஈரான் கைவிட வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தத்துக்கு ஈரான் வரவேண்டுமெனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தமொன்றை ட்ரம்ப் அறிவித்திருக்கின்றார். அந்த போர் நிறுத்தத்துக்கான முடிவு காலம் குறித்து ட்ரம்ப் இதுவரை அறிவிக்கவில்லை.


