
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன பயணித்த வாகனம் செவ்வாய்க்கிழமை (22) இரவு விபத்தில் சிக்கியது.
பிரதி அமைச்சர் கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியாவுக்குப் பயணித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
களுகொஹுதென்ன அருகே உள்ள கித்துல்கல பகுதியில், அவர் பயணித்த வாடகைக் கார் வீதியிலிருந்து விலகி, பிரதான வீதியிலுள்ள ஒரு மின்சாரக் கம்பத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.

பிரதி அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இருப்பினும், விபத்தில் வாகனம் கடுமையாகச் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.


