
தமிழகம் முழுவதும் இன்று (23) சட்ட சபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, காலை 7.00 மணியிலிருந்து வாக்குப் பதிவு ஆரம்பமானது
அதன்படி, இன்று மாலை 6.00 மணிவரை வாக்குப் பதிவு இடம்பெறும்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3579 ஆண்கள், 443 பெண்கள், திருநங்கை ஒருவர்.

அங்கு மொத்தமாக 234 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைப்பதற்கு 118 பெரும்பான்மை இடங்களை வெல்ல வேண்டும்.
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.


