தலைப்புச் செய்திகள்

161 கிலோ ஹெரோயினுடன் பயணித்த படகுடன் சந்தேக நபர்கள் கைது

கடலில் பயணித்த படகிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய பொதியுடன் நான்கு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ஆழ்கடலில் ஒரு மீன்பிடிப் படகில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்றபோது சந்தேக நபர்கள் நேற்ற (17) கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்தப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

முதற்கட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 24, 36, 46 மற்றும் 48 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெவினுவர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் தெரிவித்தது.

மீன்பிடிப் படகிலிருந்து சுமார் 161 கிலோகிராம் மற்றும் 108 கிராம் சந்தேகத்திற்கிடமான ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்தது.

மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.