
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ரூ. 30,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கணக்காளரைமு், முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்று (18) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்வதற்காக, முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு, மார்ச் மாதத்துக்கு செலுத்த வேண்டிய தொகைக்கான காசோலையை வழங்குவதற்காக, சந்தேக நபர்கள் ரூ. 30,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.


