
இஸ்ரேலியர்களில் பெரும்பான்மையானோர் யுத்தத்தை தொடர வேண்டுமென விரும்புகிறார்கள் என்று, கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆய்வுக் கழகம் (INSS) ஞாயிற்றுக்கிழமை – இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டது.
இந்தக் கருத்துக் கணிப்புக்கு பதிலளித்தவர்களில் 61 சதவீதம் பேர் போர் நிறுத்தத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலியர்களில் மிகப் பெரும்பான்மையானோர் எதிர்க்கின்றனர் என்றும், மீண்டும் போர் மூளும் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டுக்குள் ஈரானுடனான சண்டை மீண்டும் தொடங்கும் என்று 73 சதவீதம் பேர் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.
அதேபோன்று 69 சதவீதம் பேர் – செவ்வாயன்று அமெரிக்காவில் தொடங்கிய லெபனான் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், லெபனானில் ராணுவ நடவடிக்கை தொடர வேண்டுமென தெரிவித்திருக்கிறார்கள்.


