தலைப்புச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில், இஸ்ரேலுக்கு ஏற்பட்ட செலவு குறித்து அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய போரில், இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்து – அந்த நாட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இஸ்ரேலுக்கு செலவாகியுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது ஆரம்ப மதிப்பீட்டின் படி எடுக்கப்பட்ட கணக்காகும்.

11 பில்லியன் டொலர் என்பது – இலங்கைப் பெறுமதியில் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரத்து 600 கோடி ரூயாயாகும்.

பட்ஜெட் செலவினங்களில் இதனை 35 பில்லியன் ஷேக்கல்கள் ($11.52 பில்லியன்) என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதில் 22 பில்லியன் ஷேக்கல்கள் பாதுகாப்புச் செலவாக செல்கின்றன. இந்த தொகை ஏற்கனவே 2026 பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.