தலைப்புச் செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கள் நாடு முழுவதும் அடையாளப் போராட்டம்

வைத்தியர்களின் இடமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (31) நாடு தழுவிய அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.

நாடு தழுவிய அனைத்து வைத்தியசாலைகளிலும் காலை 8.00 மணிக்கு போராட்டம் இந்தப் போராட்டம் தொடங்கியதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மகாரகமவில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலை, சிறப்பு சிறுநீரகப் பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று அவர் கூறியுள்ளார்.

தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.