
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே, எந்தவொரு போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கள நிலவரம் நேற்றிரவு நிலவரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள பல்வேறு பகுதிகளில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் தொடர்வது குறித்த தங்கள் கோபத்தை வெளிப்படுத்த, அரசுக்கு ஆதரவான பேரணியில் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

ஈரானின் மின்சார உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் காரணமாக, தெஹ்ரானில் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தலைநகரின் மேற்குப் பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாகக் கடுமையான குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி வரும் இஸ்ஃபஹானின் பல நகரங்களிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன.


