
தற்போது தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, ஏப்ரல் 22 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு – கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு இன்று (26) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்தி குமார இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
விசாரணை தொடர்பாக சந்தேக நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தாலும், அவர் இவ்வழக்கில் ஒரு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், விசாரணைக்கு வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று நீதவான் இதன்போது கூறினார்.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, பெப்ரவரி 25 அன்று – பேலியகொடவில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான தொடர் விசாரணையின் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று (25) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று முன்னதாக அவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, அங்கு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் அவருக்கு உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறித்து விசாரிப்பதற்காக, சுரேஷ் சாலே 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



