
திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், தீயணைப்பு பொறுப்பு அதிகாரியும், தீயணைப்பு வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கந்தளாய் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா உணவகத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான தீ பாதுகாப்புச் சான்றிதழை வழங்குவதற்காக – சந்தேக நபர்கள் ரூ.40,000 கேட்டதாகக் கூறப்படுவது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்தத் தொகை ரூ.35,000 ஆகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் ரூ.10,000 வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் மீதமுள்ள ரூ.25,000 ரொக்கமாக செலுத்துமாறும் கோரப்பட்டது.
லஞ்சத்தின் ஒரு பகுதியாக ரூ.20,000 ரொக்கமாகப் பெற்றதாகக் கூறப்படும் பின்னர், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பின்னர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


