தலைப்புச் செய்திகள்

யுத்தத்தில் இறந்த ஈரான் மாணவர்களின் பெற்றோருக்கு, சீனா அவசர உதவி அறிவிப்பு

ரானில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அவசர மனிதாபிமான உதவியாக 02 லட்சம் டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் சுமார் 06 கோடி 24 லட்சம்) வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஈரானிய செம்பிறைச் சங்கத்திடம் வழங்குமாறு சீனாவின் வெளியுறவு அமைச்சு இந்த உதவியை அனுப்பவுள்ளது.

போரில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்காக இந்த நிதி குறிப்பாக ஒதுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் பேசிய – சீனாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன்; “பொதுமக்கள் மீதான அனைத்து கண்மூடித்தனமான தாக்குதல்களையும் சீனா கண்டிக்கிறது” எனத் தெரிவித்தார்.