தலைப்புச் செய்திகள்

தன்பாலின திருமணத்துக்கான தண்டனை செனகலில் இரு மடங்கானது

தன் பாலின திருமணத்துக்கு எதிராக செனகல் நாட்டில் கடுமையான தண்டனை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டமூலம் – அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு தண்டனையாக அந்த நாட்டில் அதிகபட்சமாக 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை இருந்தது. இந்த நிலையில் அந்தத் தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பாலினத் திருணத்துக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகை – இலங்கை மதிப்பில் சுமார் 8 லட்சத்து 41 ஆயிரமாக இருந்தது. ஆயினும் தற்போது தற்போது 53.85 லட்சமாக உயரத்தப்பட்டுள்ளது.

”எங்கள் ஆபிரிக்காவில், இங்கே செனகலில் நாங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அது எங்கள் கலாசாரத்தில் இல்லை” என்று அந்த நாட்டின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஃபாமா பா நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

அந்த நாட்டு ஜனாதிபதியின் அனுமதிக்குப் பின்னர் – குறித்த சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் LGBTQ வினருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செனகல் நாட்டின் பெரும்பான்மை மதம் இஸ்லாம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 97% க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் ஆவர்.