
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு நேட்டோ அமைப்ப நாடுகள் போதிய ஆதரவளிக்கவில்லை எனக் கூறி, அந்நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்காவின் பாரம்பரிய நட்புகளை – அவர் “கோழைகள்” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, நடந்து வரும் போலில் – ஈரானில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 பேரைத் தாண்டியுள்ளது. குறைந்தது 204 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானிய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – கடந் இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
பசிஜ் படைகளின் உளவுத்துறைத் தலைவரான ஈரானிய ஜெனரல் இஸ்மாயில் அஹ்மதியும் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு முழுவதும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், ஈரானும் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவ்ரூஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறது. நவ்ரூஸ் என்பத பழைமையான பாரசீகப் புத்தாண்டுப் பண்டிகையாகும்.


