
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவை – லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஏர்பஸ் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புடைய 02 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவர் கைதாகியுள்ளார்.

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக கபில சந்திரசேன இன்று (12) வியாழக்கிழமை கைதானார்.


