தலைப்புச் செய்திகள்

தெற்கில் சிக்கிய படகில் 1000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள்: கடற்படை அதிரடி

த்து பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கடலில் பயணித்த பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்திய போது, இவை கைப்பற்றப்பட்டன.

அந்தப் பட சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் எனப்படம் மெத்தம்பேட்டமைன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதன் பெறுமதி 10 பில்லியன் (1000 கோடி) ரூபாய் என பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினர் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் ரவைக் கூடுகளையும் மீட்டனர்.

படகில் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து – கைது செய்யப்பட்ட படகு, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், சந்தேக நபர்கள் திக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.