
கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றை 200 டொலர் கொடுத்து வாங்குவதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என, ஈரான் தெரிவித்துள்ளது.
“எண்ணெய் பீப்பாயை 200 டொலர் கொடுத்து வாங்க தயாராகுங்கள், ஏனெனில் நீங்கள் வளைகுடாவில் நீங்கள் ஏற்படுத்திய பிராந்திய பாதுகாப்பு ஸ்திரமின்மையைப் பொறுத்தே, எண்ணெய் விலை அமையும்” என்று ஈரானின் ராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி அமெரிக்காவுக்குக் கூறியுள்ளார்.
ஈரான் மீதான போர் துவங்குவதற்கு முன்னர் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 60 – 70 டொலர் வரை இருந்தது.
பின்னர் கடந்த 09ஆம் திகதி 119.5 டொலராக – ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை அதிகரித்தது.

ஆயினும் தற்போது 11ஆம் திகதிய நிலைவரப்படி, ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை, 87 – 91 டொலாக இறங்கியுள்ளது.
உலகக்கு 20 வீதமான எண்ணெய் கொண்டு செல்லப் பயன்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


