தலைப்புச் செய்திகள்

பஸ்ஸை திருடிச் சென்றவர் கைது

லங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ் ஒன்றை – திருடியதாக, சந்தேகத்தின் பேரில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துநர் ஒருவரை – நேற்று (10) காலை பண்டாரவளை பொலிஸார் கைது செய்தனர்.

34 வயதான சந்தேக நபர் – பண்டாரவளையில் உள்ள எட்டப்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது.

வெல்லவாய டிப்போவுக்குரிய மேற்படி பஸ், பண்டாரவளை – மாத்தறை பிரதேசங்களுக்கிடையில் பயணித்து வந்தது. இது பண்டாரவளை பிரதான பஸ் நிலையத்தில் இரவு நிறுத்தப்பட்டிருந்தத நிலையில், மறுநாள் காலை மாத்தறைக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

மது அருந்திவிட்டு பஸ் நிலையத்துக்கு வந்த சந்தேக நபர், பஸ்ஸில் ஏறி அங்கேயே தூங்கிவிட்டார். மறுநாள் காலை அவர் பஸ்ஸை எடுத்துக்கொண்டு பண்டாரவளை – கொழும்பு பிரதான வீதியில் ஓட்டிச் சென்று – தியத்தலாவை வழியாக வெலிஹெல பகுதி வீதியோரத்தில் விட்டுச் சென்றார்.

விசாரணைகளில் அவர் ஹப்புத்தளையில் ஒரு காரை மோதிவிட்டு வேகமாக ஓடியதாக தெரியவந்தது.