
ஈரானில் அமெரிக்கா பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பல வெடிப்புகள் கேட்டுள்ளன. அதே நேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஈரானின் ஐஆர்ஜிசி ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான விரோதமான மற்றும் குற்றவியல் எதிரியின் ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் விரிவான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் முதல் அலை தொடங்கியுள்ளது” என ஈரான் அறிவித்துள்ளது.


