தலைப்புச் செய்திகள்

பஹ்ரைனிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்

ஹ்ரைனிலுள்ள – அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படையின் தலைமையகம் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பஹ்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்கப் படைகளை ஈரான் குறிவைத்துள்ளது.

ஈரானிய ஏவுகணையை பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துள்ளதாக கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் இருந்து – ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் பதிவாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

முன்னதாக, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஈரானின் ஐஆர்ஜிசி உறுதிப்படுத்தியுள்ளது.