
பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘போடி லஸ்ஸி’ என அறியப்படும் ஜனித் மதுசங்க – இன்று (27) அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடுமையான பாதுகாப்புடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
தென் மாகாணத்தில் நடந்த பல கொலைகள் தொடர்பாகவும், பிணை நிபந்தனைகளை மீறியதற்காகவும் ‘பொடி லஸ்ஸி’ – பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மேலும் விசாரணைகளுக்காக காலி பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.

டிசம்பர் 09, 2025 அன்று, ‘பொடி லஸ்ஸி’ – பலபிட்டிய நீதவா்ன நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், “பொடி லஸ்ஸி” அவருக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறி, நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், அவர் இந்தியாவில் பதுங்கி இருந்ததாகவும் இலங்கை பொலிஸார் கண்டு பிடித்தனர்.
அதன்பிறகு, பொலிஸ் மா அதிபர் – இந்திய பொலிஸாருடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு அமைய, அவர் கைதானர். அதே நேரத்தில் அவரை விரைவாக நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


