தலைப்புச் செய்திகள்

மொபிட்டெல் கடந்த வருடம் 6.5 பில்லியன் ரூபாய் லாபமீட்டியது

இலங்கை தொலைத்தொடர்பு (SLT) – மொபிடெல் கடந்த ஆண்டு ரூ. 6.5 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதாரத் துறை பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக அது மாற்றப்பட்டுள்ளது என்றார்.

“SLT-மொபிடெல் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக இருந்தது. அது விற்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. இருப்பினும், ஒரு வருடத்திற்குள் லாபம் ஈட்டும் நிறுவனமாக அது மாறியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.