தலைப்புச் செய்திகள்

காதி நீதவான் 05 ஆயிரம் ரூபாய், லஞ்சம் வாங்கிய போது அகப்பட்டார்

கோறளைப்பற்று (மத்தி) காதி நீதவான் ஒருவர் ரூ.5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று (17) இவரைக் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத், இந்தக் கைது நடந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் கோரி, முறைப்பாட்டாளர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவி பராமரிப்பு வழக்குத் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முறைப்பாட்டாளர் தேவையான கொடுப்பனவுகளைச் செய்யத் தவறியதால், நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையை பிறப்பித்தது.

இதனையடுத்து பிடியாணையை ரத்து செய்ய வேண்டிய – பராமரிப்பு வழக்கு தொடர்பான வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க, சந்தேக நபர் ரூ.5,000 லஞ்சமாகக் கோரி பெற்றதாகக் கூறப்படுகிறது.

வாழைச்சேனை 05 இல் அமைந்துள்ள காதி நீதிமன்ற அலுவலகத்தில் – சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.