தலைப்புச் செய்திகள்

ரணில் பதவிக் காலத்தின் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை கிடைத்தது

னாதிபதியின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதன்படி, சமன் ஏக்கநாயக்கவை தலா 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க – கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.

சமன் ஏக்கநாயக்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை விடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பொது நிதியில் ரூ.16.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, அவரின் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்த பொது நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.