தலைப்புச் செய்திகள்

‘அரகலய’வுக்கு வழங்கப்பட்ட நிதி குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்: நாமல்

‘அரகலய’ போராட்ட இயக்கம் மற்றும் அது பெற்றதாகக் கூறப்படும் வெளிநாட்டு நிதி குறித்து விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (13) ஊடகங்களிடம் பேசிய போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்;

“சில நபர்கள் ‘அரகலய’ என்ற போர்வையில் தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களை அடைய ஒரு உயிரைப் பலியிட்டனர். ஒரு இளைஞர் குழு தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரதான ஊடகங்களில் தோன்றி மக்களை அறிவுறுத்தி, தெருக்களில் இறங்கி தாக்கத் தூண்டியவர்கள் – விளைவுகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து – இப்போது அதிகாரத்தில் உள்ளனர். அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் தூக்கு மேடையில் சிக்கிவிட்டனர்” என்றார்.