தலைப்புச் செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை ஏப்ரல் – ஜுன் காலகட்டத்துக்கு அதிகரிக்கத் திட்டம்

மின்சார கட்டணத்தில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கு 13.56 சதவீத அதிகரிப்பைக் கோரி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, திருத்தப்பட்ட கட்டணங்கள் ஏப்ரல் 01 முதல் ஜூன் 30 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தத்தின் கீழ், 0–30 அலகுகளுக்கான கட்டணம் ஒரு அலகுக்கு ரூ. 4.50 இலிருந்து ரூ. 5.11 ஆகவும், 31–60 அலகுகளுக்கான கட்டணம் ரூ. 8.00 இலிருந்து ரூ. 9.08 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரூ. 18.50 ஆக இருக்கும் 61–90 அலகுகளுக்கான கட்டணம் ரூ. 21.01 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 91–120 அலகுகளுக்க தற்போதுள்ள ரூ. 24.00 எனும் கட்டணம் ரூ. 27.25 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 121–180 அலகுகளுக்கான கட்டணம் ஒரு அலகுக்கு ரூ.41.00 லிருந்து ரூ.46.56 ஆக அதிகரிக்க உள்ளது.

181 யூனிட்டுகளுக்கு மேல் மின் நுகர்வுக்கு, கட்டணத்தை ரூ.61.00 லிருந்து ரூ.69.27 ஆக உயர்த்த மத்திய மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இந்த திட்டம் தற்போது பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.