தலைப்புச் செய்திகள்

முதல் பெண் கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்

முதிகா ஜெயரத்ன இன்று (05) 42வது கணக்காய்வாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புச் சபை – இவரின் நியனமத்தை பெப்ரவரி 03ஆம் திகதி அங்கீகரித்தமையை அடுத்து, இவர் கணக்காளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்ற பின்னர், ஏப்ரல் 8, 2025 முதல் அந்தப் பதவியில் நீண்ட கால வெற்றிடம் நிலவி வந்தது. அதனை முன்னர் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றிய சமுதிகா ஜெயரத்ன – இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சமுதிகா ஜெயரட்னவின் பெயரை அரசியலமைப்ப சபை அங்கீகரிப்பதற்கு முன்னர், இந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பலரின் பெயர்களை அரசியலமைப்புச் சபை நிராகரித்தது.