தலைப்புச் செய்திகள்

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (23) நுவரெலியாவில் 5.0 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை – அதிகாலை நேரங்களில் பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள லையங்களிலிருந்து பதிவாகியுள்ளதாகவும், மத்திய மலைநாட்டில் குளிரான காலநிலை நிலவுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் முந்தைய நாளில் 3.5 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது. இது சமீபத்திய நாட்களில் மலைநாட்டுப் பகுதியில் நிலவிய வழக்கத்திற்கு மாறாக குளிரான காலநிலையாகும்.

பதுளை மற்றும் பண்டாரவளை உள்ளிட்ட மத்திய மலைநாட்டின் பிற பகுதிகளிலும் ஒப்பீட்டளவில் குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கடலோர மற்றும் தாழ்நிலப் பகுதிகள் இரவு முழுவதும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மத்திய மலைநாட்டிலுள்ள பொதுமக்கள் – குளிர் காலநிலைக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.