
நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) நலன்புரி ஆலோசகராக (Welfare Consultant) எம்.பி. அக்பர் அலி (நஸார் ஹாஜி) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆலோசனை, திட்டமிடல், முகாமைத்துவம் மற்றும் நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களில் நீண்ட கால அனுபவம் கொண்ட நஸார் ஹாஜி, பிரபல தொழிலதிபராவார்.
ஊடகவியலாளர்களின் நலன்கள் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் – நாம் ஊடகர் பேரவையின் ஆலோசகராக நாஸார் ஹாஜி நியமிக்கப்பட்டமையின் மூலம் – அந்த அமைப்பு, மேலும் முன்னேறிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”சமூக சேவையில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்து வரும் நஸார் ஹாஜி, நாம் ஊடகர் பேரவையுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது” என, அந்த அமைப்பின் செயலாளர் றிசாத் ஏ. காதர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தைத் தளமாகக் கொண்டியங்கும் நாம் ஊடகர் பேரவை, பதிவு செய்யப்பட்டு, நீண்ட காலமாக இயங்கி வருகின்றது.


