
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்துக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஏ.பி. மசூத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டொக்டர் மசூத் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க – எழுத்து மூலம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கிழக்கு மாகாணம் முழுவதும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப் புறக்கணிப்பு இன்று (22) பிற்பகல் 2.00 மணிக்கு வாபஸ் பெறப்பட்டதாக, அந்த சங்கம் அறிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


