தலைப்புச் செய்திகள்

பங்காளதேஷில் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த காலிதா ஸியா மரணம்

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், காலிதா ⁠ஸியா, நீண்டகால உடல்நலக் குறைவால் 80 வயதில் காலமானார் என்று அவருடை கட்சி தெரிவித்துள்ளது.

கலீதா ஸியா – உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு உயிரிழந்தார் என, பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) தெரிவித்துள்ளது.

கலீதா ஸியா டாக்காவில் உள்ள எவர்கேர் வைத்தியசாலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி நுரையீரல் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் அங்கேயே மரணமடைந்தார்.

அவருக்கு கல்லீரல் சிரோசிஸ், மூட்டுவலி, நீரிழிவு மற்றும் மார்பு மற்றும் இதய பிரச்சினைகள் அதிகரித்ததாக அவருடைய வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்த பங்களாதேஷின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், அவரின் எக்ஸ் பக்கத்தில் – காலிதாவின் மறைவுக்கு தனது “ஆழ்ந்த துக்கத்தை” வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று முறை பிரதமராக இருந்த அவரைபங்களாதேஷ் “ஜனநாயக இயக்கத்தின் சின்னம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “நாடு ஒரு சிறந்த பாதுகாவலரை இழந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.