தலைப்புச் செய்திகள்

268 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப் பொருடன் நால்வர் கைது

பெரும் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முயன்றபோது, ​​நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த 268.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் தாய்லாந்தின் – பாங்கொக்கில் போதைப்பொருட்களை வாங்கி, இந்தியாவின் மும்பைக்கு கொண்டு சென்று, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

20.684 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் அடங்கிய 20 பொதிகளை அவர்களின் பொருட்களுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.