தலைப்புச் செய்திகள்

பாகிஸ்தானின் உதவிப் பொருட்கள்: இலங்கையிடம் கையளிப்பு

னர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பாகிஸ்தான் அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய மனிதாபிமான உதவித் தொகை நேற்று (15) கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த உதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த  மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.