தலைப்புச் செய்திகள்

மோட்டார் பைக் மோதி, பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

படம்: AI கற்பனை உருவாக்கம்

மோட்டார் பைக் ஒன்று மோதி, வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அளுத்கம-மதுகம வீதியில் வேகமாக வந்த மோட்டார் பைக் மோதியதால், இந்த விபத்து நடந்துள்ளது.

உயிரிழந்த சார்ஜன்ட் அஹுங்கல்லே பகுதியைச் சேர்ந்த 54 வயதான கோடெல்லகே உப்புல் சமந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லபுவெல்கொட சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார், வேக வரம்பை மீறியதற்காக மோட்டார் பைக்கை நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததாகக் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், பொலிஸ் சார்ஜன்ட் மீது மோதியது. இதில் அவர் அருகிலுள்ள வடிகால் ஒன்றில் வீசப்பட்டதோடு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சார்ஜன்ட் தர்கா டவுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட – பின்னர் உயிரிழந்தார்.

மோட்டார் பைக் ஓட்டியவர் சிறிய காயங்களுக்கு உள்ளானார் எனவும், அவர் அளுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.