
நிலச்சரிவால் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டெடுத்த ராணுவத்தினர், அவற்றை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹங்குரான்கெத்த பகுதியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே, ராணுவத்தினர் இவற்றை மீட்டனர்.

ஹங்குரான்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட படையினர், இடிபாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது, 03 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 05 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கண்டுபிடித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட பணம் மற்றம் தங்க நகைகள் – நேற்றைய தினம் (14) உரிமையாளரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன.


