
இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, அரசுக்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் இவரைக் கைது செய்துள்ளனர்.

தம்மிக ரணதுங்க – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவராக இருந்த காலத்தில், 2017/2018 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் கொள்முதல் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் கொள்முதல் நடைமுறைகளில் முறைகேடுகள் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


