தலைப்புச் செய்திகள்

விமான நிலையத்திலிருந்து தப்பித்த 20 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் வீட்டில் சிக்கின

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத குஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்து – பெங்கொக்கில் இந்த போதைப்பொருட்களை வாங்கி, மற்றொரு நபர் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு கடத்தல்காரரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வத்தளையைச் சேர்ந்த 34 வயதான சந்தேக நபர் நேற்று இரவு (டிசம்பர் 14) கைது செய்யப்பட்டார்.

அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​திறக்கப்படாத 20 பயணப் பைகளுக்குள் 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும், அவரின் வசமிருந்த 4,900 அமெரிக்க டொலர்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும் இன்று (டிசம்பர் 15) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.