தலைப்புச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 672 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவித்துள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போது, இதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியாருக்குரியவை என்றும், 586 ஏக்கர் காணிகள் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டவை எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் 34.58 ஏக்கர் அரச காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு – தொடர்புடைய தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காணிகள் விடுவிக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.