தலைப்புச் செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் மரணம்: 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் மொத்தமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய நாட்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக சுமார் 480 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், ஏதேனும் அனர்த்தங்கள் அல்லது வானிலை தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால் 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளது.