தலைப்புச் செய்திகள்

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சஷீந்திரவுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) பிணை வழங்கியுள்ளது.

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் புரிந்ததாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்தமையை அடுத்து, இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.

‘அரகலய’ காலத்தில் போராட்டக்காரர்கள் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்துக்குத் தீ வைத்ததாகக் கூறி, அதற்கு இழப்பீடாக ரூ. 88 லட்சத்து 50,000 ஐ சட்டவிரோதமாகப் பெற்றார் என, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ குற்றத்தைப் புரிந்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சஷீந்திர ராஜபக்ஷ இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டு – பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.