
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ எனும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) மற்றும் நேபாள பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, இவருடன் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் பிப்ரவரி 19 அன்று ஹல்ஃப்ஸ்டோர்ப் மாஜிஸ்திரேட் நீதிமன்ற எண் 05 க்குள் வைத்து, கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிதாரருக்கு 25 வயதான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபர் உதவினார் என நம்பப்படுகிறது.


