
– அஷ்ரப் ஏ சமத் –
பாத்திமா நளீரா எழுதிய ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்றது.
மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் விசேட விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கவிஞர் பாத்திமா நளீரா- சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் பாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் மற்றும் மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.





