தலைப்புச் செய்திகள்

சட்டத்தரணியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சட்டத்தரணியொருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து – தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

முறைப்பாட்டின் படி, சட்டத்தரணியின் காரை நீதிமன்ற வளாகத்திலிருந்து அகற்றும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்தே தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து, அவரை 13 ஆம் திகதி (நாளை) வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாக்குதலுக்குள்ளான சட்டத்தரணியுடன் சம்பவ இடத்தில் இருந்த சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், பொலிஸ் அதிகாரியை பேசி அச்சுறுத்தி அவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டுகளும் விசாரணையில் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தரணிக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையிலான வாக்குவாதத்தைக் காட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஒரு சிடி, ஆதாரமாக பொலிஸ் புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்ட பல நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்கிசை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.